• Home
  • Samacheer Kalvi Books
  • About
  • Contact
  • Privacy
  • Disclaimer

Raise-GK

Learn-Grow-Raise

You are here: Home / Uncategorized / Samacheer Kalvi 6th Social Science Book Back Solution unit 2- இந்தியா-மௌரியருக்குப் பின்னர்

Samacheer Kalvi 6th Social Science Book Back Solution unit 2- இந்தியா-மௌரியருக்குப் பின்னர்

April 26, 2021 by Admin Leave a Comment

Term 3 :: Unit 2 – இந்தியா-மௌரியருக்குப் பின்னர்

பாடச் சுருக்கம்

  1. சங்கம் என்னும் சொல் புலவர்களின் குழுமத்தை குறிக்கிறது. இவ்வமைப்பு மதுரையில் பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கியது.
  2. சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் தமிழகப்பகுதிகளை ஆட்சி செய்தனர்.
  3. இம்மூன்று முடியசர்களுக்கு அப்பாற்பட்டு,தமிழகப் பகுதிகள் பல்வேறு சுதந்திரமான குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டன.
  4. தொல்லியல் அகழ்வாய்வுகள் தமிழகத்திற்கும் அயல் நாடுகளுக்கும் இடையே இருந்த வணிக உறவுகளை உறுதி செய்கின்றன.
  5. கி.பி. (பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்க காலம் முடிவுறத் தொடங்கியது. தமிழகத்தைக் களப்பிரர்கள் கைப்பற்றினர். அவர்களின் ஆட்சிக்கான ஆதாரங்கள் சமண, பௌத்த இலக்கியங்களில் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 6th Social Science history term 3 unit 2 Book Back Solution

சரியான விடையைத் தேர்தெடுக்கவும்

1. கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் ________

அ) புஷ்யமித்ரர்

ஆ) அக்னிமித்ரர்

இ) வாசுதேவர்

ஈ) நாராயணர்

Ans: புஷ்யமித்ரர் 

2. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்_____

அ) சிமுகா

ஆ) சதகர்ணி

இ) கன்கர்

ஈ) சிவாஸ்வதி

Ans: சிமுகா

3. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

அ) கனிஷ்கர்

ஆ) முதலாம் கட்பிசஸ்

இ) இரண்டாம் கட்பிசஸ்

ஈ) பன்-சியாங்

Ans: கனிஷ்கர்

4. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளிதழைத்தோங்கியது.

அ) தக்காணம்

ஆ) வடமேற்கு இந்தியா

இ) பஞ்சாப்

ஈ) கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

Ans: தக்காணம்

5. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சிசெய்தனர்.

அ) சிர்கப்

ஆ) தட்சசீலம்

இ) மதுரா

ஈ) புருஷபுரம்

Ans: சிர்கப்

கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

1. கூற்று: இந்தோ-கிரேக்கர்களின், இந்தோ-பார்த்தியர்களின் குடியேற்றங்கள்இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன.

காரணம்:  குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவுகொண்டு இரண்டறக் கலந்தனர்.

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

Ans: கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

2. கூற்று 1 : இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும்,உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.

கூற்று 2 : இந்தோ-கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்துவைத்தனர்.

அ) கூற்று 1 தவறு , ஆனால் கூற்று 2 சரி

ஆ) கூற்று 2 தவறு , ஆனால் கூற்று 1 சரி

இ) இரண்டு கூற்றுகளுமே சரி

ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு

Ans :   கூற்று 2 தவறு , ஆனால் கூற்று 1 சரி 

3. பொருந்தாததை வட்டமிடுக

புஷ்யமித்ரர்,வாசுதேவர்,சிமுகா ,கனிஷ்கர்

Ans: கனிஷ்கர்

4. ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்

i)கடைசி சுங்க அரசர் யார்?

ii) சாகர்களில் மிக முக்கியமான, புகழ் பெற்ற அரசர் யார்?

iii) மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியர் யார்?

iv) கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?

        Answer:

        i) தேவபூதி

        ii) ருத்ரதாமன்

       iii) வாசுதேவர்

       iv) புனித தாமஸ்

கோடிட்ட இடங்களை நிரப்பவும்

  1. இந்தோ-பார்த்திய அரசை நிறுவியவர் _______
  2. தெற்கே_________ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.
  3. ஹாலா எழுதிய நூலின் பெயர் ________
  4. ________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.
  5. குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் _______

Ans:

  1. கோண்டோ பெர்னஸ்
  2. அசோகர்
  3. சட்டசாய்
  4. சுசர்மன்
  5. பெஷாவர்

சரியா/தவறா என எழுதுக

  1. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டுமையமாகத் திகழ்ந்தது.

      Ans : சரி

  1. காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்துபெறுகிறோம்

     Ans : சரி

  1. குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தின், பத்தாவது அரசராவார்.

     Ans : தவறு

  1. ‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டது.

     Ans : சரி

பொருத்துக

அ) பதஞ்சலி                              -1. கலிங்கம்

ஆ) அக்னிமித்ரர்                      -2. இந்தோ-கிரேக்கர்

இ) அரசர் காரவேலர்             -3. இந்தோ-பார்த்தியர்

ஈ) டெமிட்ரியஸ்                     -4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்

உ) கோண்டோ பெர்னெஸ் -5. மாளவிகாக்னிமித்ரம்.

அ) 4, 3, 2, 1, 5

ஆ) 3, 4, 5, 1, 2

இ) 1, 5, 3, 4, 2

ஈ) 2, 5, 3, 1, 4

Ans: 4, 5, 1, 2, 3

பின்வருவனவற்றில் தவறான கூற்றைக் கண்டறிக

  1. குஷாணர் வடமேற்குச் சீனாவில் வாழ்ந்த யூச்-சி பழங்குடி மக்களின் ஒரு பிரிவினரைஉருவாக்கினார்.
  2. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.
  3. சாஞ்சியின் மாபெரும் ஸ்தூபியும் அதன் சுற்றுவேலியும் சுங்கர் காலத்தைச் சேர்ந்தவை.
  4. பன்-சியாங் சீனத் தளபதியாவார். இவர் கனிஷ்கரால் தோற்கடிக்கப்பட்டார்.

Ans: கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.

 

Filed Under: Uncategorized

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • 10th standard Samacheer Kalvi Books PDF Free Download
  • 9th standard Samacheer Kalvi Books PDF Free Download
  • 8th standard Samacheer Kalvi Books PDF Free Download
  • 7th standard Samacheer Kalvi Books PDF Free Download
  • Samacheer Kalvi 6th Social Science Book Back Solution unit 2- இந்தியா-மௌரியருக்குப் பின்னர்

Categories

  • History
  • Religious
  • Samacheer Books
  • Sports
  • Uncategorized

Copyright © 2023 · AgentPress Pro on Genesis Framework · WordPress · Log in